ETV Bharat / city

வரலாற்றில் இல்லாத வகையில் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன - சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர்

சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்றில் இல்லாத வகையில் இந்தாண்டு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக அக்கல்லூரியின் முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் இல்லாத வகையில் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன- சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர்

author img

By

Published : Aug 5, 2022, 2:19 PM IST

Updated : Aug 5, 2022, 2:38 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (ஆக. 5) முதல் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை பாடப் பிரிவில் உள்ள 1,106 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கு, 95 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன என சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வை தொடங்கிவைத்த பின்னர் இதுகுறித்து மேலும் சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன்,"மாநிலக் கல்லூரியில் சேர உள்ள மாணவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. இதில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகின்றன. விளையாட்டுப் பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், அந்தமான் நிக்கோபார் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோர் அளிக்கப்பட்டுள்ளனர்.

10ஆம் தேதி அனைத்து அறிவியல் பாடப் பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நடைபெறுகின்றன. முதல் கட்ட கலந்தாய்விற்கு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். சென்னை மாநிலக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டு 'நான் இக்கல்லூரியின் சீனியர்’ எனக் கூறியதுடன் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். கல்லூரியில் 2 ஆயிரம் மாணவர்கள் அமரும் வகையில், முன்னாள் கருணாநிதி பெயரில் அரங்கம் கட்டப்படும் எனவும் உணவகம் சீரமைத்து தரப்படும் எனவும் அறிவித்தார்.

சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் பேட்டி

அதேபோல், மாநில கல்லூரி தேசிய தரவரிசை பட்டியலில் 3ஆவது இடம் பெற்றதற்காக தமிழ்நாடு ஆளுநர் அழைத்து பாராட்டினார். இதனால் இந்தாண்டு மாநில கல்லூரியில் சேர்வதற்கு 95 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. மாநிலக் கல்லூரியின் வரலாற்றில் இல்லாத வகையில் விண்ணப்பங்கள் பெற்றுள்ளோம். கடந்த ஆண்டு 53 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

வழக்கமாக 35 ஆயிரம் அல்லது 40 ஆயிரம் விண்ணப்பங்கள் மாநிலக் கல்லூரிக்கு வரும். மாநிலக் கல்லூரியில் இளங்கலை படிப்பில் முதலாம் ஆண்டில் 1,106 இடங்கள் உள்ளன. ஆனால் 95 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன, ஒரு இடத்திற்கு 95 மாணவர்கள் போட்டியிட்டுள்ளனர்.

வணிகவியல் பாடத்தில் சேருவதற்கு அதிகபட்சமாக 11 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த ஆண்டு மேலும் ஒரு கூடுதல் சிறப்பாக தமிழ் துறைக்கு 7,300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது நாங்கள் நிச்சயமாக எதிர்பாராத ஒன்று கடந்தாண்டு 3 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்திருந்தன.

அதேபோல், ஆங்கிலப் பாடப் பிரிவிற்கு 4,765 விண்ணப்பங்கள் வந்துள்ளது. மொழி பாடத்தை படிக்கவும் மாணவர்கள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளன. திராவிட மாடல் ஆட்சியில் தமிழுக்கும், மொழிக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து உள்ளதால் மாணவர்கள் தமிழ் வழியில் சேரவும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கல்லூரியில் உள்ள இடங்களை விட அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதால் ஆண்டுதோறும் அரசு கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு இடங்களை ஒதுக்கீடு செய்யும் அதே நடைமுறையை பின்பற்றி இந்தாண்டும் 25 சதவீதம் வரை மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு அரசு அனுமதி வழங்கும்” என கூறினார்.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பினை முடித்தவர்களுக்கு சென்னை ஐஐடியில் இலவசமாக திறன் பயிற்சி!

Last Updated : Aug 5, 2022, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.