ETV Bharat / city

முன்விரோதம்: மொபட்டில் சென்ற சிறுவனுக்கு அரிவாள் வெட்டு - இருவர் கைது - Homicidal attack on a boy in Chennai

திருவேற்காடு - அயப்பாக்கம் சாலையில், முன்விரோதம் காரணமாக மொபட்டில் சென்ற சிறுவனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
author img

By

Published : Nov 16, 2021, 9:27 AM IST

சென்னை: வில்லிவாக்கம், வள்ளியம்மை நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவரது மகன் அப்பு என்ற சந்துரு (16). இவர் பத்தாம் வகுப்புவரை படித்து முடித்துள்ளார். இதற்கிடையில் இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் இளைஞருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதி திருவேற்காடு, ஐயப்பன் நகரில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி சந்துரு இருசக்கர வாகனத்தில் (மொபட்) தனது சகோதரியின் மூன்று வயது குழந்தையை அழைத்துக்கொண்டு அயப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, திருவேற்காடு-அயப்பாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் சந்துருவை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். மேலும், மூன்று வயது குழந்தைக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் படுகாயமடைந்த இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (20), அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளை என்ற மபசீர் அகமது (21) ஆகியோரைக் காவல் துறையினர் நேற்று (நவம்பர் 15) கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:சபரிமலை நடை திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.