ஜெயலலிதா பல்கலைக்கழத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியான அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.
ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக காழ்ப்புணர்ச்சியோடு நடந்துகொள்வதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர். இதற்கு மறுப்புத் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தாங்கள் காழ்ப்புணர்ச்சியோடு நடந்துகொள்ளவில்லை என்றார்.
மேலும் அவர், காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் 'அம்மா உணவகம்' அதே பெயரில் இயங்காது என்பதையும் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் வெளிநடப்புச் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "தமிழ்நாடு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தவர் ஜெயலலிதா.
கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. ஜெயலலிதா பெயரிலேயே பல்கலைக்கழகம் தொடர வேண்டும்" எனத் தெரிவித்தார்.