சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று(ஜூலை.30) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக உறுப்பினர்கள், மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து ரிப்பன் மாளிகையின் நுழைவு வாயிலில் பதாகைகள் ஏந்தி திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாமன்ற உறுப்பினர் கே.பி.கே சதீஷ், "திமுகவின் 487ஆவது வாக்குறுதியில் கரோனாவில் இருந்து மக்கள் மீண்டும் வரும் வரை சொத்து வரி ஏற்ற மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோலதான் மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மின்சாரத்தை தடையின்றி வழங்குவோம் என்று சொன்னார்கள். ஆனால் எந்த இடத்திலும் மின்சாரம் தடையின்றி கிடைப்பதில்லை. பொய்யான வாக்குறுதிகளை தந்து திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. 2014 ஆண்டு கடைசியாக மின்சாரம் கட்டணம் ஏற்றப்பட்டது. இதற்கு பிறகு அதிமுக கட்டணத்தை உயர்த்தவில்லை. மக்கள் விழித்து கொண்டார்கள். உடனடியாக சொத்து வரி, மின்சாரம் கட்டண உயர்வை ரத்து செய்யா விட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மிக்கு தடை சட்டம்; தலைமை செயலாளர் ஆலோசனை