ETV Bharat / city

முதலமைச்சர் - அமைச்சர் விஜயபாஸ்கர்; முடிந்தது பனிப்போர்! - விஜயபாஸ்கர்

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கத் தொடங்கியிருப்பதையடுத்து முதலமைச்சருக்கும் அவருக்குமான பனிப்போர் விலகியிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

vijayabaskar
vijayabaskar
author img

By

Published : Apr 16, 2020, 4:45 PM IST

தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் கரோனா பாதிப்பு குறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர், ’நீங்கள் ஏன் அண்மைக்காலமாக செய்தியாளர்களை சந்திக்க வருவதில்லை?’ என்று கேட்டக் கேள்விக்கு, ’முதலமைச்சர் உத்தரவின்பேரில் பல்வேறு மருத்துமனைகளில் ஆய்வு மற்றும் ஆலோசனைகள் நடத்தி வருகிறேன். முதலமைச்சரின் உத்தரவுபடி சுகாதாரத்துறைச் செயலாளர் செய்தியாளரை சந்தித்து வருகிறார். அவ்வப்போது தலைமைச் செயலாளரும், முதலமைச்சரும் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். மற்றபடி நீங்கள் நினைக்கும் எந்த ஒரு அரசியல் உள்நோக்கமும் இதில் இல்லை’ என்று பதில் கூறினார். ஆனால், அமைச்சர் கூறுவதுபோல் மேற்கூறிய நிகழ்வுகள் இயல்பான ஒன்றா? ஊடகங்கள்தான் மிகைப்படுத்துகின்றனவா? என்ற கேள்வி எழுகிறது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளாக விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்ட ஜனவரி மாதத்திலிருந்தே, துறை சார்ந்த அமைச்சர் என்கிற அடிப்படையில் விஜயபாஸ்கர்தான் செய்தியாளர்களை சந்தித்து வந்தார். சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்வது, முதலமைச்சருடன் அவ்வப்போது இதுகுறித்து ஆலோசிப்பது என பணியாற்றி வந்தார். இதனால் எதிர்கட்சித் தலைவர்கள் சிலர் கூட அமைச்சர் விஜயபாஸ்கரை பாராட்டினர். பின்னர், தமிழ்நாட்டிலும் கரோனா தொற்று பரவி உயிரிழப்புகள் நிகழ்ந்த பின்னரும் தினமும் அவரே செய்தியாளர்களை சந்தித்து தகவல்களை தெரிவித்து வந்தார். மேலும், தனது டிவிட்டர் பக்கம் மூலம் தினசரி கரோனா குறித்த செய்திகளையும் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பாராட்டும் விதமாக ஏராளமான மீம்சுகளும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின. மேலும் விஜயபாஸ்கர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் தனக்கென ’ஐ.டி விங்கை’ ஏற்படுத்தி, அதில் அவரை புகழ்பாடும் விதமான புகைப்படங்கள், வீடியோக்களை இடம்பெறச் செய்ய வைப்பதாகவும் சொல்லப்பட்டது. இத்தனைக்கும் ஒருபடி மேலே போய், ஏழாம் அறிவு படத்தில் வரும் படக்காட்சியை மாற்றி அமைத்து, விஜயபாஸ்கர் மாநிலமாக இருப்பதால் கரோனா தொற்று இங்கு இல்லை என்பது போன்ற வீடியோவும் பெருமளவில் வைரலானது. அமைச்சரின் இச்செயல்களைப் பார்த்து எரிச்சலாகிப்போன சக அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் முதலமைச்சரிடம் போய் முறையிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் அழைத்து, ’இனிமேல் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் மட்டும் செய்தியாளர்களை சந்திக்கட்டும், அவசியமான பணிகளை மட்டும் நீங்கள் மேற்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டதாகவும் தகவல் வெளியானது. அதேபோல், அந்நிகழ்வுக்குப் பின்னர் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ்தான் நாள்தோறும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் பீலா ராஜேஷ்

இந்நிலையில் எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து, எங்கள் தலைவரும் நானும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது எடுத்துக் கூறியபோது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் தந்தார். போதுமான அளவில் அது இல்லாவிட்டாலும், பொறுப்பை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்கள் நலன் கருதி நாங்கள் வரவேற்றுப் பாராட்டினோம். அதன்பிறகு, சில மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று முன்னேற்பாடு நடவடிக்கைகளைக் கவனித்து, கரோனா பரவல் பற்றிய புள்ளிவிவரங்களை ஊடகங்கள் முன்னிலையில் வெளிப்படுத்தத் தொடங்கினார். ஆனால் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்காமல், சுகாதாரத்துறைச் செயாலாளர் பீலா ராஜேஷ் சந்தித்து வருகிறார்.

துரைமுருகன்
துரைமுருகன்

மக்களுக்கு உண்மை தெரியவருகிறது என்பதாலும், தன்னைவிட தனது அமைச்சரவை சகாவுக்கு ஊடக ஒளிபரப்புகள் மூலம் மக்களிடம் விளம்பரம் கிடைக்கிறது என்பதாலும் துறையின் அமைச்சரையே ஓரங்கட்டிவிட்டு, தனது விளம்பரத் தூதுவராக தலைமைச் செயலாளரை முதலமைச்சர் முன்னிறுத்தியிருப்பதை, ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி செய்திகளைக் கவனிக்கும் அனைத்து மக்களும் அறிந்துகொண்டு விட்டார்கள். இந்த நேரத்திலும் இப்படி ஒரு மோசமான அரசியல் கண்ணோட்டமா என மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் “ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், "தலைநகர் சென்னையில் இருந்து கரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடவேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் அண்மைக்காலமாக பார்வையில் தென்படாமல் இருக்கிறார். இச்சூழலில் புதுக்கோட்டையில், தமது வீட்டில் அகல் விளக்கை ஏற்றியிருக்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு பதிலாக சுகாதாரத்துறைச் செயலாளர் சந்தித்து வருகிறார். இத்தகைய திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள்"

என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த, சுப. உதயகுமார் தனது முகநூல் பதிவில், “ தப்லிகி ஜமாத் தப்லிகி ஜமாத், என்று பீலா விடும், பீலா ராஜேஷ் சங்கி அதிகாரி வேண்டாம், மக்கள் பிரதிநிதி விஜயபாஸ்கர் கரோனா நடவடிக்கைகளை மேலாண்மை செய்யட்டும் “ என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சருக்கு தெரியாததா, சுகாதாரத் துறைச் செயலாளருக்கும், முதலமைச்சருக்கும் தெரியப்போகிறது. ஏன்? சுகாதாரத்துறை அமைச்சரை பேசுவதற்கு அனுமதிப்பது இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருந்தார்.

முதலமைச்சருடன் அமைச்சர் விஜயபாஸ்கர்
முதலமைச்சருடன் அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்த நிலையில்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார். எதிர்கட்சியினரின் தொடர் விமர்சனங்களும், சமூக வலைதளங்களில் விஜயபாஸ்கருக்கு எழுந்த ஆதரவுமே அவரை மீண்டும் முன்னிலைப் படுத்தும் முடிவுக்கு முதலமைச்சர் வந்துள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தரப்பில் பேசப்படுகிறது. முதலமைச்சருடனான பனிப்போர் முடிந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க தொடங்கிவிட்டார். இடைப்பட்ட நாட்களில் முடங்கியிருந்த அவரின் ‘ஐ.டி விங்கும்’ இனி முழுவீச்சில் செயல்படத் தொடங்கிவிடுமென்று எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி வழங்க வேண்டும் - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.