சென்னை விமான நிலையத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் சிறப்பாக அமைந்தது. இதன் மூலம் 41 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு 36 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வர உள்ளது. மேலும் அவர்கள் தொழில் தொடங்க முதலமைச்சர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பொறுப்பற்ற வகையில் பேசிக் கொண்டிருக்கிறார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து அவர் விமர்சித்து பேசுவது, மல்லாந்து படுத்துக்கொண்டு மார்பில் எச்சிலை துப்புவதற்கு ஈடானது. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாசு இல்லாத வகையில் மின்சார கார்கள் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.