ETV Bharat / city

ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமரின் உரை - அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை- அமைச்சர் சேகர்பாபு - ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமரின் உரை

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமரின் உரை ஒளிபரப்பட்டது குறித்து இணை ஆணையரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
author img

By

Published : Nov 16, 2021, 3:46 PM IST

சென்னை: செளகார்பேட்டை பள்ளியப்பன் தொருவில் உள்ள அருணாச்சலேஸ்வரர் மற்றும் வரதராசப் பெருமாள் கோயிலில் இணையம் மூலம் வாடகை செலுத்தும் முறையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "இணைய வழியில் வாடகை செலுத்தும் முறை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். 1492 வாடகை வசூல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக 5,720 திருக்கோயில்களில் இணையம் மூலம் வாடகை வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கி வரும் கோயில்களில் 11 கோடி ரூபாய் வாடகை இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
வாடகை தொடர்பாக அனைத்து விவரங்களையும் அறநிலையத்துறை இணையதளத்தில் பார்க்கலாம், இணையத்தில் வாடகை செலுத்த இயலாதவர்கள் பொது வசூல் மையங்களில் வாடகை செலுத்தலாம்.
பல இடங்களில் கோயில் சொத்துக்களின் வாடகை அதிகமாக உள்ளதாகப் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வருகின்றன. மூன்றாண்டுக்கு ஒருமுறை 15% வாடகை உயர்வு முறை நடைமுறையில் உள்ளது.

அனுமதி கொடுப்பது இயலாத ஒன்று

  • தொடர்ந்து, கோயிலுக்கு சொந்தமான அசையா சொத்துகளுக்கு செலுத்த வேண்டிய வாடகை, இழப்பீடு தொகையினை பிரதிமாதம் 10-ம் தேதிக்குள் இணைய வழியில் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இயலாதவர்கள் பொது வசூல் மையமான கோயில் அலுவலகத்தில் செலுத்தி கணினி வழி இரசீது பெற்று கொள்ளும் வசதி துவக்கி வைக்கப்பட்டது. pic.twitter.com/mPgYZCGyK9

    — P.K. Sekar Babu (@PKSekarbabu) November 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

எனவே வாடகை நிர்ணயக் குழு மீண்டும் கூடி எளிய மக்கள் பாதிக்காதவாறு நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும், கோயில்களையும் சொத்துக்களைப் பாதுகாக்கவே அறநிலையத்துறை. தனியாரிடமும் தனி நபர்களிடம் நிர்வகிக்க அனுமதி கொடுப்பது இயலாத ஒன்று.

இந்து சமய அறநிலையத்துறை அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" எனப் பேசினார்.

அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடியது திமுக அரசு அல்ல

மேலும், குறிப்பிட்ட தரப்பினரால் அறநிலையத்துறை மீது கொடுக்கப்படும் எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியக்கூடியது திமுக அரசு அல்ல. கோயில் சொத்துக்களை மீட்கத் தொடங்கியுள்ளோம், செயல்பாடுகள் நேர்மையாக உள்ளதால் எந்த அழுத்தங்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் அரசுக்கு உள்ளது.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமரின் உரை ஒளிரப்பட்டது குறித்து இணை ஆணையரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே அரசு செயல்படும். ஆன்மிகம் தொடர்பான வகுப்புகள் நடத்த ஏற்கனவே உயர் கல்வித்துறையிடம் மனு அளித்துள்ளோம் அனுமதி கிடைத்ததும் விரைவில் புதிய கல்லூரிகளில் ஆன்மிகம் குறித்த பாடங்கள் நடத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க:சர்க்கரையை விட இனிப்பானவள் நம்ம 'கண்மணி': வெளியான நயன் போஸ்டர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.