சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள் சிவபெருமானை வழிபட உகந்ததொரு காலமே பிரதோஷம் எனப்படுகிறது.
உலகிற்கு ஏற்படவிருந்த பேரழிவை தன்னகத்தே இருத்தி, ஆலகால விஷத்தை அருந்தி, சிவபெருமான் உலகைக் காத்து அருள்புரிந்த காலமே இந்தப் பிரதோஷ காலம் ஆகும். மொத்தம் 20 வகையான பிரதோஷங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மாதம் இருமுறை வளர் பிறை, தேய் பிறை நாள்கள் பிரதோஷ நாள்களாகும். இந்நாள்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான பிரதோஷ காலத்தில் சிவனை மனதில் இருத்தி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி நன்மை பெறலாம்.
குறிப்பாக, தேவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இவ்வாறு சிவன் அருள்புரிந்த நாள் சனிக்கிழமை என்பதால், சனியன்று வரும் பிரதோஷம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
ஆடி மாதம் பொதுவாகவே பக்தி மணம் கமழும் மாதமாவதால், ஆடி சனிப் பிரதோஷம் இன்னும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: கிரிவலப்பாதை மகா நந்திக்கு நடந்த ஆடி மாத பிரதோஷ பூஜை!