சென்னை ஐஐடி-இல் இன்று (ஏப்.8) முருகப்பா குழுமம் சார்பில் அந்நிறுவனத்தின் மறைந்த முன்னாள் தலைவர் எ.எம்.எம். அருணாசலம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. 1978-81 ஆண்டு காலகட்டத்தில் சென்னை ஐஐடியின் நிர்வாக குழு தலைவராக அருணாசலம் இருந்துள்ளார்.
சென்னை ஐஐடிக்கும் முருகப்பா குழுமத்திற்குக்கும் உள்ள நீண்ட கால உறவை பிரதிபளிக்கும் விதமாகவே இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவத்துள்ளது. இந்த அறக்கட்டளைக்கு முதற்கட்டமாக ரூ.4 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நவீன வசதிகளுடன் கூடிய ஆடிட்டோரியம் ஒன்றும் அருணாசலம் பெயரில் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் எ.எம்.எம். குழும தலைவர் எம்.ஏ. அழகப்பன் தலைமை தாங்கினார். சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தியும் நிகழ்வில் சிறப்புரையாற்றினார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு