ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

author img

By

Published : Jun 18, 2021, 6:47 AM IST

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக காணலாம்

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு

டெல்லியில் முதலமைச்சர்:

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தியை சந்திக்கிறார். நேற்று முதலமைச்சர் பிரதமர் மோடியை சந்தித்து 25 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

எம்எல்ஏக்களுக்கு கரோனா பரிசோதனை:

தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 21ஆம் தேதி கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று முதல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

முன்களப் பணியாளர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி:

கரோனா முன்களப் பணியாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 26 மாநிலங்களில் உள்ள 111 பயிற்சி மையங்களில் இந்நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மருத்துவர்கள் போராட்டம்:

மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்றக்கோரி நாடுமுழுவதும் மருத்துவர்கள், இன்று கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் நடத்த உள்ளனர்.

மருத்துவர்
மருத்துவர்

நியூசிலாந்து vs இந்தியா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி சவுத்தாம்டன் நகரில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம் சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

விராட் கோலி vs  கேன் வில்லியம் சன்
விராட் கோலி vs கேன் வில்லியம் சன்

பப்ஜி கேம் அறிமுகம்

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா கேம் இந்தியாவில் இன்று முதல் அறிமுகமாகிறது. தென் கொரியாவின் கிராப்டன் நிறுவனம் இந்த கேமின் டீசரை அண்மையில் வெளியிட்டு இந்திய பப்ஜி பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது. பிளே ஸ்டோரில் மட்டும் இடம்பெற்றுள்ள இந்த கேமை ஆண்டிராய்டு செல்போன் பயனர்கள் பதிவிறக்கம் செய்து விளையாடலாம். விரைவில் ஐஃபோன் பயனர்களுக்கான வெர்சன் குறித்து கிராப்டன் நிறுவனம் அறிவிக்க வாய்ப்புள்ளது.

பப்ஜி
பப்ஜி

மழை.. மழை..

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.