ETV Bharat / city

சென்னை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் - மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் இன்று (ஜூலை 30) 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம்

author img

By

Published : Jul 30, 2022, 8:11 PM IST

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (ஜூலை.30) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் விளம்பர பலகைகள் மீதான விளம்பர வரி குறித்த தணிக்கை தடைகளை நீக்க அரசின் கருத்துரு பெற அரசுக்கு செயற்குறிப்பு அனுப்பும் தீர்மானம்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக வழங்கப்பட்டது மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய திருத்திய வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலங்களை ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானம்.

சென்னை பள்ளிகளில் தற்காலிக கணினி உதவியாளர்கள், கணினி ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள், பாதுகாவலர்கள் மழலையர் பிரிவில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆயாக்கள் நியமிப்பது தொடர்பான தீர்மானம்.

அனைத்து சென்னை பள்ளிகளிலும் நூலகம் அமைத்து செயல்பட தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் வழங்கும் தீர்மானம். காற்றின் தரத்தை கண்காணிக்கும் நிலையத்தை பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் ஒரு இடத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் நான்கு இடத்திலும் அமைக்கும் பணிக்கான தீர்மானம்.

பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால் தூர்வாரும் மற்றும் சிறு பராமரிப்பு பணிகளுக்கு பழைய மழைநீர் வடிகால்களை இடித்து புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கும், திட்ட மேலாண்மை கலந்த ஆலோசகர் பணிக்கு பணிக்கான வழங்கியமைக்கான தீர்மானம்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் GIS (புவியியல் தகவல் அமைப்பு) பிரிவை நிறுவுவதற்கு அரசு நிர்வாக பணி எதிர்நோக்கி ஒப்பம் கோரும் தீர்மானம். சென்னை மாநகராட்சியில் பணியில் உள்ள 23 நிலை வழக்கறிஞர்களை பணியிலிருந்து விடுவித்து, புதிதாக 15 நிலை வழக்கறிஞர்களின் நியமித்து தொடர் கட்டணம் வழங்கும் தீரமானம்.

சென்னை முழுவதும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் போதிய வெளிச்சத்தை மேம்படுத்த எல்இடி விளக்குகளுடன் கூடிய உயர் கோபுர மின் விளக்குகளை 68.99 கோடி மதிப்பீட்டில் நிர்பயா நிதி மூலம் அமைக்க தீர்மானம்.

சென்னையில் உள்ள 87 சாலைகளில் 117 கிலோ மீட்டர் தொலைவிற்கு தெருக்களை மேம்படுத்தும் மெகா ஸ்ட்ரீட்ஸ் திட்டத்திற்கான அரசின் நிர்வாக அனுமதி கோரும் தீர்மானம். சென்னையில் உள்ள மாம்பழம் கால்வாயில் பெருவள்ள சேதத்தை கட்டுப்படுத்தும் வகையில் 4290 மீட்டர் தொலைவிற்கு இரண்டு கட்டங்களாக 106.85 கோடி மதிப்பில் கால்வாய் சீரமைப்பு, பூங்கா, மிதிவண்டிக்கான பாதை உள்ளிட்ட மேம்படுத்துதல் பணிக்கான ஒப்பந்தம் கோரும் தீர்மானம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு? வரும் 1ஆம் தேதி ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.