ETV Bharat / city

ஆதரவற்ற 7 இளைஞர்களுக்கு கப்பல் நிறுவனங்களில் பணி உறுதி ஆணை: முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்!

author img

By

Published : Dec 21, 2020, 7:23 PM IST

அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் குழந்தை பராமரிப்பு இல்லங்களில் தங்கி பயின்ற 7 இளைஞர்களுக்கு கப்பல் நிறுவனங்களில் பணியில் சேருவதற்கான பணி உறுதி ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

C M Palanisamy issu the job  order
C M Palanisamy issu the job order

சென்னை: சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் குழந்தை பராமரிப்பு இல்லங்களில் தங்கி பயின்ற 7 இளைஞர்களுக்கு மெரைன் பவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், (Maritime Foundation Charitable Trust) இந்துஸ்தான் கப்பல் பயிற்சி நிறுவனம் (Hindustan Institute of Maritime Training) ஆகிய பயிற்சி நிறுவனங்களில் 6 மாத காலம் கடல்சார் பயிற்சியில் சேர்வதற்கான சேர்க்கை ஆணை வழங்கப்பட்டன.

மேலும், அவர்கள் பயிற்சி முடித்த பிறகு தனியார் கப்பல் நிறுவனங்களில் பணியில் சேருவதற்கான பணி உறுதி ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இதற்காக, சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் குழந்தை பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருந்து வீடு திரும்பிய மற்றும் பிற்காப்பு நிறுவனங்களில் தங்கியுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் கல்வி, உடற்கூறு, சமூக, பொருளாதார மற்றும் குடும்ப சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில், ஆர். ராஜசேகர், கே. கார்த்திக், திரு.ஆர். சக்திவேல், எஸ். சரத், எஸ். வின்சென்ட் வில்லியராஜ், ஏ. கார்த்திக், எம். கிருஷ்ணன் ஆகிய 7 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இம்மாணவர்களுக்கான பயிற்சி கட்டணத்தில் இந்நிறுவனங்கள் அளித்துள்ள கட்டணச் சலுகை போக, மீதமுள்ள பயிற்சி கட்டணமான 7 லட்சம் ரூபாய் தமிழ்நாடு இளைஞர் நீதி நிதியிலிருந்து வழங்கப்படும்.

ஆறு மாத கால கப்பல் பயிற்சியை முடித்த பிறகு இவ்விளைஞர்களுக்கு பணி வழங்கும் வகையில், தனியார் கப்பல் நிறுவனங்கள்அளித்துள்ள பணி உறுதி ஆணைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

இதன்மூலம், ஆதரவற்ற இளைஞர்கள், வணிக கப்பல்களில் பணிபுரிவதற்கு தேவையான பயிற்சியும், வேலைவாய்ப்பும் பெற்று வாழ்வில் மேன்மையுற வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் க. சண்முகம், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளர் எஸ். மதுமதி,சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர். லால்வேனா, பயிற்சி நிறுவனங்களின் நிர்வாகிகள், தனியார் கப்பல் நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் 7ஆவது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.