இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,
"தமிழ்நாட்டில் மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஆண்கள் 38 பேரும் பெண்கள் 28 பேரும் என 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,821ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் இன்று 43 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றிலிருந்து இன்று மேலும் 94 பேர் குணமடைந்துள்ளதால், அதன் எண்ணிக்கை 960ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம், தமிழ்நாட்டின் இறப்பு எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதுகலை மருத்துவ மாணவர்கள் ஆறு பேரும் குணமடைந்தனர். தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 34லிருந்து 41ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்படும். இன்று சென்னையில் 43 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர், தென்காசியில் 5 பேர், மதுரை 4 பேர், பெரம்பலூர் & விருதுநகரில் தலா 2 பேர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலையில் தலா ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்", என்று தெரிவித்தார்.