கரோனா நெருக்கடியான சூழ்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பில் அமரும்போது பல கேள்விகள் அவர் முன்வைக்கப்பட்டன.
- கரோனா நெருக்கடியை அவர் எப்படிச் சமாளிக்கப்போகிறார்?
- தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஸ்டாலின் மீட்டெடுப்பரா?
- அவரின் முதல்கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?
- கருணாநிதி இல்லாத திமுகவின் ஆட்சி எப்படி இருக்கும்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவர் ஆட்சியில் அமர்ந்தபின் எடுத்த நடவடிக்கைகள் பதிலளித்தன. முதலமைச்சராகப் பதவியேற்ற நாளிலிருந்து பம்பரமாய் சுழன்று பணிகளை மேற்கொண்டுவரும் ஸ்டாலின் இதுவரை பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
கடந்த 50 நாள்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த சிறப்பான 50 திட்டங்களைப் பார்க்கலாம்.
உழவர்களுக்காக
- டெல்டா உழவர்களின் நலனுக்காக ரூ.61.09 கோடி மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம்
- உழவர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு கிராமப்புறச் சந்தைகளை உருவாக்குதல்
- ஆண்டுதோறும் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை
- புத்துயிரூட்டி உழவர் சந்தைகளை மாநிலம் முழுவதும் நிறுவுதல்
- மூன்று வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய தீர்மானம்
- காவிரி டெல்டா கடைமடைப் பகுதிவரை கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள்
- திருவாரூரில் 30 கோடி ரூபாயில் நெல் சேமிப்புக் கிடங்கு
மருத்துவத் துறை
- கரோனா தொற்றாளர்கள் தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற ஏற்பாடு
- தென்சென்னையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை
- பல்வேறு மாவட்டங்களில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள், தடுப்பூசி முகாம்கள் தொடக்கம்
- செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க அனுமதி கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம்
- மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளைத் தொடங்குவதற்காக கடிதம்
- திரவ மருத்துவ ஆக்சிஜனுக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு
- கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு போஸ்ட் கோவிட் கிளினிக்
முன்களப் பணியாளர்களுக்கு
- கரோனா காலத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை
- பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு
- முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - ரூ.160 கோடி ஒதுக்கீடு
வழக்குகள் திரும்பப் பெறுதல்
- எட்டு வழிச்சாலை, மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்
- பத்திரிகையாளர் மீது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ்
- ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ்
ரேஷன் அட்டை தாரர்களுக்காக
- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நான்காயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதி
- அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டம்
- குடும்ப அட்டை விண்ணப்பிக்க தகுதிவாய்ந்த அனைவருக்கும் 15 நாள்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள்
கல்வி
- தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை
- தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை
- நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்துசெய்ய வலியுறுத்தல்
- எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம்
- மதுரையில் கருணாநிதி பெயரில் 70 கோடி ரூபாயில் நினைவு நூலகம்
- ஆண்டுதோறும் மூன்று எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது
- 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து
- ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
அறநிலையத் துறை
- கோயில் நிதி, சொத்துகளின் தணிக்கைச் செயல்முறைகளை நெறிப்படுத்துதல்
- பழமையான திருக்கோயில்களைப் புதுப்பிக்க 100 கோடி ரூபாய் செலவில் திட்டம்
- அர்ச்சகர்களுக்கு நான்காயிரம் ரூபாய், மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் திட்டம்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தைச் செயல்படுத்த புதிய துறை உருவாக்கம்
- ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு
- சாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணம்
- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தைச் செயல்படுத்த புதிய துறை உருவாக்கம்
- மரக்கன்றுகள் நடும் திட்டம்
- நேரடியாக 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ் புகார் அளிக்க புதிய இணையதளம்
- சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை குறைப்பு
- போக்குவரத்து ஊழியர்களுக்கு 492 கோடி ரூபாய் ஓய்வுதிய பலன்கள்
- சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க வல்லுநர் குழு
எழுவர் விடுதலை
- வளர்ச்சியில் பின்தங்கிய வட மாவட்டங்களில் 22 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகள்
- கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி வழங்கும் திட்டம். அவர்களது பெயரில் ரூபாய் 5 லட்சம் வைப்பீடு
- மாவட்டந்தோறும் பணிபுரியம் மகளிருக்கான தங்கும் விடுதிகள்
- தலைச்சிறந்த பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய நிதித் துறை குழு
- 'சிங்காரச் சென்னை 2.0' என்னும் புதிய திட்டம்
- இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை
- எழுவர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்குக் கடிதம்
இதையும் படிங்க: 'கோட்டை முதல் சிங்கம் வரை' - முதலமைச்சரின் முதல் 30 நாள்கள்