மும்பை : இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் இன்று (ஏப்.7) 393.01 புள்ளிகள் சரிந்தது. இந்தச் சரிவு, நுகர்வோர் பொருள்கள் மற்றும் தொழில்நுட்ப பங்குகளின் விற்பனை அழுத்தத்தால் நிகழ்ந்தது.
இந்த நிலையில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 393.01 புள்ளிகள் (0.66 சதவீதம்) குறைந்து 59,217.40 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 91.40 புள்ளிகள் (0.51 சதவீதம்) குறைந்து 17,716.25 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து டைடன் பங்குகள் 2.49 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி பங்குகள் 1.85 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் 1.41 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன.
இதற்கிடையில், என்டிபிசி பங்குகள் 1.44 சதவீதமும், டாக்டர் ரெட்டி'ஸ் பங்குகள் 1.25 சதவீதமும், சன் பார்மா பங்குகள் 0.81 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி, பவர் கிரிட் மற்றும் ஐசிஐசிஐ பங்குகள் லாபகரமாகவும் வர்த்தகம் ஆகின.
இதையும் படிங்க : Today market updates: சென்செக்ஸ் 435 புள்ளிகள் வீழ்ச்சி!