இன்றைய வர்த்தக நாளில் இந்திய சந்தைகள் கணிசமான உயர்வைக் கண்டன. வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (பிப். 24) சுமார் 1,030.28 புள்ளிகள் (2.07 விழுக்காடு) உயர்ந்து 50,781.69 புள்ளிகளில் நிறைவு செய்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 274.20 புள்ளிகள் உயர்ந்து 14,982 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக, ஆக்ஸிஸ் வங்கி நிறுவன பங்குகள் 5 விழுக்காடு உயர்வு கண்டன. அதற்கு அடுத்தபடியாக எச்.டி.எஃப்.சி. வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
அதேவேளை பவர் கிரிட், டாக்டர் ரெட்டி, டி.சி.எஸ்., ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவைக் கண்டன.
இதையும் படிங்க: உற்பத்திசார் திட்டங்கள் இந்தியாவை புதுமையின் பாதையில் கொண்டுசெல்லும்: அமிதாப் கந்த்