இன்று (மார்ச் 9) மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வைச் சந்தித்தது. வர்த்தகநாள் முடிவில் சென்செக்ஸ் 584.41 புள்ளிகள் (1.16 விழுக்காடு) உயர்ந்து வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 142.00 (0.95 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 15,098.40 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
ஸ்டேட் வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன. அதேவேளை டாடா ஸ்டீல், இந்தியன் ஆயில், கெயில், பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டன.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் ஓலா ஃபியூச்சர் பேக்டரி: சீறிப்பாய வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ்!