ETV Bharat / business

நிதி நிறுவன பங்குகள் ஏற்றம்: 2ஆம் நாளாக உயர்ந்த பங்குச் சந்தை! - கச்சா எண்ணெய் விலை

நிதி நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்ததால், இந்திய பங்குச் சந்தை இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டுள்ளது.

stock
stock
author img

By

Published : Apr 28, 2020, 11:00 PM IST

நிதி நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்க ஆர்வம் காட்டியதால் இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்றம் கண்டது. இருப்பினும், மருத்துவத் துறை பங்குகளையும் நுகர்வோர் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகளையும் முதலீட்டாளர்கள் விற்றதால் இன்று நாள் முழுவதும் இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தையும் இறக்கத்தையும் மாறி மாறி சந்தித்தது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 371.44 புள்ளிகள் (1.17 விழுக்காடு) உயர்ந்து 32,114.52 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 98.60 புள்ளிகள் (1.06 விழுக்காடு) உயர்ந்து 9,380.90 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்

இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் அதிகபட்சமாக 17.07 விழுக்காடு ஏற்றம் கண்டது. அதைத் தொடர்ந்து பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எஃப்.சி. வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எம்&எம், எஸ்.பி.ஐ. வங்கி ஆகியவற்றின் பங்குகள் ஏற்றம் கண்டன.

மறுபுறம் சன் பார்மா, நெஸ்லே இந்தியா, என்.டி.பி.சி., எச்.சி.எல் டெக், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.

காரணம் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு உதவ ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தொழில் துறையை ஊக்குவிக்க மற்றுமொரு பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதாலும் இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்றம் கண்டுள்ளது.

சர்வதேச பங்குச் சந்தை

ஹாங்காங், சியோல் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இருப்பினும் ஷாங்காய், டோக்கியோ பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. ஐரோப்பிய பங்குச் சந்தையும் ஏற்றம் கண்டு தற்போது வர்த்தகமாகிவருகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா உயர்ந்து 76.18 ரூபாய்க்கு வர்த்தகமாகியது.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 1.95 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 23.52 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதையும் படிங்க: விரைவில் 5ஜி சேவை: நோக்கியாவுடன் ஒப்பந்தம் செய்த ஏர்டெல்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.