ETV Bharat / business

வாரத்தின் முதல் நாளை சரிவில் தொடங்கி இந்திய பங்குச் சந்தை - Top gainers

மும்பை: இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை சரிவில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

Sensex crashes
Sensex crashes
author img

By

Published : Aug 31, 2020, 6:16 PM IST

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை (ஆக. 28) வர்த்தகமானதைவிட சுமார் 430 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. இருப்பினும், அதன் பின்னர் பங்குச் சந்தை சரிவின் பாதையிலேயே பயணித்தது.

சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நாள் இறுதியில் 839.02 புள்ளிகள் (2.13 விழுக்காடு) குறைந்து, 38,628.29 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 260.10 புள்ளிகள் (2.23 விழுக்காடு) குறைந்து 11,387.50 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக சன் பார்மா நிறுவனத்தின் பங்குகள் ஏழு விழுக்காடு வரை சரிவடைந்தது. அதைத்தொடர்ந்து எஸ்பிஐ, பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், என்.டி.பி.சி., ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் வங்கி, எம் & எம், மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

மறுபுறம் ஓ.என்.ஜி.சி., டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன.

வாரத்தின் முதல் நாளை சரிவில் தொடங்கி இந்திய பங்குச்சந்தை

சர்வதேச பங்குச் சந்தை

சர்வதேச அளவில் டோக்கியோ பங்குச் சந்தையை தவிர சியோல், ஷாங்காய், ஹாங்காங் ஆகிய பங்குச் சந்தைகள் சரிவடைந்தே தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

அதேநேரம், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டே தற்போது வர்த்தகமாகி வருகின்றன.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 1.48 விழுக்காடு அதிகரித்து, பேரல் ஒன்று 46.49 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க: வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்கும் டிராய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.