ETV Bharat / business

உலகளவில் டாப் 50க்குள் இடம்பிடித்த ரிலையன்ஸ் நிறுவனம்!

டெல்லி: உலகளவில் முதல் 50 நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் 48ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Reliance breaks into top 50 most valued cos globally, ranks 48

author img

By

Published : Jul 24, 2020, 6:33 AM IST

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பெங்களூரு, பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கூகுள் நிறுவனம், இந்தியாவில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் சாதகமான சூழலை உருவாக்கியது.

இதன் எதிரொலியாக ரிலையன்ஸ் நிறுவன பங்கு தனது வாழ்நாள் உயர்வைத் தொட்டு நேற்று (ஜூலை 23) வர்த்தகமானது. அதன்படி, நேற்று ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.82 விழுக்காடு வரை ஏற்றம் கண்டு 2060.65 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 13.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 13 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைக் கொண்ட முதல் நிறுவனமாக ரிலையன்ஸ் உருவெடுத்துள்ளது.

இதன்மூலம் உலகளவில் மதிப்புமிக்க முதல் 50 நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது 48ஆவது இடத்தை பிடித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்துவருகின்றன. ரிலையனஸ் தனது ஜியோ தளத்தின் 25.24 விழுக்காடு பங்குகளை 1.18 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.