ETV Bharat / business

தொடர் ஏற்றத்திற்குப் பின் சரிவில் இந்தியப் பங்குச்சந்தை

மும்பை: ஒரு வார காலமாக ஏற்றம்கண்டு வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை இன்று திடீரென்று பெரியளவில் சரிவை எதிர்கொண்டுள்ளது.

Stock Market
Stock Market
author img

By

Published : Nov 19, 2020, 8:59 PM IST

Updated : Nov 19, 2020, 9:11 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள், கரோனா தடுப்பு மருந்து குறித்த நேர்மறையான செய்தி ஆகியவற்றால் கடந்த ஒரு வாரமாகவே இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு வர்த்தகமானது.

இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று வர்த்தகமானதைவிட சுமார் 30 புள்ளிகள் குறைந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. மதியம் வரை ஏற்றம் இறக்கம் என்று மாறிமாறி வர்த்தகமான மும்பை பங்குச்சந்தை, மதியம் 2 மணிக்கு மேல் மிகப் பெரியளவில் சரிவைச் சந்தித்தது.

இறுதியில், இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 580.097 புள்ளிகள் (1.31 விழுக்காடு) குறைந்து 43,599.96 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 166.55 புள்ளிகள் (1.29 விழுக்காடு) குறைந்து 12,771.70 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக எஸ்பிஐ நிறுவனத்தின் பங்குகள் 4.88 விழுக்காடு சரிந்தது. மேலும், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

மறுபுறம், பவர் கிரிட், ஐடிசி, என்டிபிசி, டாடா ஸ்டீல், டைட்டன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

சர்வதேச பங்குச்சந்தை

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருவதால் சர்வதேச பங்குச்சந்தைகள் மூன்றாவது நாளாக சரிவை கண்டுள்ளன.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 0.65 விழுக்காடு குறைந்து 44.05 டாலருக்கு வர்த்தகமாகிவருகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எட்டு காசுகள் குறைந்து ரூ.74.27-க்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க: தடுப்பு மருந்து முடிவுகள் எதிரொலி: கிடுகிடுவென உயர்ந்த ஃபைஸர் நிறுவன பங்குகள்

Last Updated : Nov 19, 2020, 9:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.