மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (ஆக. 19) வர்த்தகமானதைவிட சுமார் 294 புள்ளிகள் குறைந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது.
சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நாள் இறுதியில் 394.40 புள்ளிகள் (1.02 விழுக்காடு) சரிவடைந்து, 38,220.39 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 96.20 புள்ளிகள் (0.84 விழுக்காடு) உயர்ந்து 11,312.20 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் பங்குகள் இரண்டு விழுக்காட்டிற்கும் மேல் சரிவைச் சந்தித்தது. அதேபோல், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், எம் & எம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.
மறுபுறம் என்டிபிசி, ஒன்.என்.ஜி.சி பவர்கிரிட், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன.
சர்வதேச பங்குச்சந்தை
சர்வதேச அளவில் டோக்கியோ, சியோல், ஷாங்காய், ஹாங்காங் பங்குச்சந்தைகள் சரிவடைந்தே தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
அதேபோல், ஐரோப்பிய பங்குச்சந்தைகளும் சரிவடைந்தே வர்த்தகமாகி வருகின்றன.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 1.06 விழுக்காடு குறைந்து, பேரல் ஒன்று 44.89 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா குறைந்து 75.02 ரூபாய்க்கு வர்த்தகமானது.
இதையும் படிங்க: இந்தியாவின் ஜிடிபியில் சரிபாதியை கடந்த ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு!