ETV Bharat / business

தொடர்ந்து 2ஆவது நாளாக சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச்சந்தை!

மும்பை: இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சரிவடைந்து தனது வர்த்தகத்தை நிறைவுசெய்துள்ளது.

Market Roundup
Market Roundup
author img

By

Published : Sep 4, 2020, 6:07 PM IST

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (செப். 3) வர்த்தகமானதைவிட சுமார் 436 புள்ளிகள் குறைந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று (செப். 04) நாள் முழுவதும் சரிவிலேயே இந்தியப் பங்குச்சந்தை வர்த்தகமானது.

சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நாள் முடிவில் 633.76 புள்ளிகள் (1.63 விழுக்காடு) சரிந்து 38,357.18 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 193.60 புள்ளிகள் (1.68 விழுக்காடு) குறைந்து 11,333.85 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் நான்கு விழுக்காடு வரை சரிவைச் சந்தித்தது. மேலும், டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ., என்.டி.பி.சி., பாரதி ஏர்டெல், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

மறுபுறம் மாருதி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம்கண்டு தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.

சர்வதேச பங்குச்சந்தை

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையின் நள்ளிரவு வர்த்தகம் கடுமையாகச் சரிவடைந்தது.

அதேபோல டோக்கியோ, சியோல், ஷாங்காய், ஹாங்காங் ஆகிய பங்குச் சந்தைகளும் 1.25 விழுக்காடு வரை சரிவைக் கண்டு தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.

அதேநேரம், ஐரோப்பிய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றம்கண்டு வர்த்தகமாகிவருகின்றன.

தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச்சந்தை

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 0.91 விழுக்காடு அதிகரித்து, பேரல் ஒன்று 44.47 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 பைசா அதிகரித்து 73 ரூபாய் 14 காசுகளுக்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க: இந்திய வங்கிச் செயலிகளில் ஐ.சி.ஐ.சி.ஐ. மட்டும் தான் டாப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.