மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (செப். 6) வர்த்தகமானதைவிட சுமார் 88 புள்ளிகள் குறைந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. இன்று (செப். 7) நாள் முழுவதும் சரிவிலேயே வர்த்தகமான இந்தியப் பங்குச் சந்தை கடைசி 30 நிமிடங்களில் பெரும் ஏற்றம் கண்டது.
சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நாள் முடிவில் 60.5 புள்ளிகள் (0.16 விழுக்காடு) உயர்ந்து 38,417.23 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 21.20 புள்ளிகள் (0.19 விழுக்காடு) உயர்ந்து 11,355.05 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக இன்ஃபிராடெல் நிறுவனத்தின் பங்குகள் ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்தது. மேலும், ஹெச்டிஎஃப்சி லைப், ஐடிசி, இந்துஸ்தான் யுனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம்கண்டு தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மறுபுறம் எம் & எம், யுபிஎல், பஜாஜ் பைனான்ஸ், கெயில், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
இதையும் படிங்க: Viஆன வோடபோன் ஐடியா - பயனாளர்களுக்கு வழங்கப்படும் சேவையில் மாற்றம்?