பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது நிலுவைத் தொகைகளை அரசுக்கு செலுத்த, 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று (செப்.01) உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் சிறப்பான ஏற்றத்தைக் கண்டன. பாரதி ஏர்டெல், ஜெ.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், ஹிண்டால்கோ, ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின.
இன்ப்ராடெல், ஓ.என்.ஜி.சி., ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், இன்போசிஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 272.51 புள்ளிகள் உயர்ந்து 38,900.80 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 82.75 புள்ளிகள் உயர்ந்து 11,470.25 புள்ளிகளில் இன்றைய நாளில் நிறைவுற்றது.
பொருள் வணிகச் சந்தை
- சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 85.04 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 78.86 ரூபாய்க்கும் விற்பனையானது.
- 22 காரட் ஆபாரணத் தங்கத்தின் விலை இன்று 10 கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து 49,720 ரூபாயாக வர்த்தகமானது.
- வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,100 ரூபாய் உயர்ந்து 68,700 ரூபாயாக வர்த்தகமானது.
இதையும் படிங்க: நிலுவைத் தொகையை செலுத்த 10 ஆண்டுகள் காலக்கெடு; தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிம்மதி