ETV Bharat / business

உபரி வரிகளை குறைத்த மத்திய அரசு! - ஏறுமுகத்தில் பங்குச்சந்தை - நிஃப்டி

மும்பை: கடந்த ஒருமாத காலமாக தொடர் சரிவைச் சந்தித்துவந்த பங்குச்சந்தை மீண்டும் ஏறுமுகத்தை காணத் தொடங்கியுள்ளது.

mark
author img

By

Published : Aug 9, 2019, 1:14 PM IST

2019-20ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப்பின் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி தொடர் சரிவை சந்தித்துவருகின்றன. நிதிநிலை அறிக்கையில் பெரு நிறுவனங்களை பாதிக்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இந்தச் சரிவானது ஏற்பட்டதாகச் சந்தை நிபுணர்கள் கூறிவந்தனர்.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாகப் பங்குச்சந்தை மீண்டும் ஏறுமுகத்தை காணத் தொடங்கியுள்ளது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 636 புள்ளிகள் உயர்ந்தும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 176 புள்ளிகள் உயர்ந்தும் காணப்பட்டன.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் பங்குச்சந்தை மீண்டும் ஏற்றத்தைக் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 450 புள்ளிகள் அதிகரித்தும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 140 புள்ளிகள் அதிகரித்தும் வர்த்தகம் செய்துவருகிறது.

வெளிநாட்டு முதலீடுகளுக்கான உபரி வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் பெரு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி தரவே இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Intro:Body:

The company said that it will use the IFC investment for pan India expansion and product diversification.

Hyderabad: International Finance Corporation (IFC), a member of the World Bank Group, has committed to invest Rs 130 crore in Srinivasa Farms, a Hyderabad-based poultry production, breeding and animal feed player.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.