டெல்லி: உலோக தங்கத்தின் விலை இன்றைய வர்த்தகத்தில் 575 ரூபாய் உயர்ந்து , 10 கிராமிற்கு ரூ. 49,125ஆக இருந்தது.
முந்தைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.48,550ஆக இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் ரூ.575 உயர்ந்து ரூ.49,125ஆக இருந்தது. அதேபோல, வெள்ளியின் விலை முந்தைய வர்த்தகத்தில் ரூ.65,472ஆக இருந்த நிலையில், ரூ.1,227 உயர்ந்து ரூ.66,999ஆக இருந்தது.
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.37,400ஆக இருந்தது. காலையில், சவரனுக்கு ரூ. 320 உயர்ந்த நிலையில், மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 128 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை 1100 ரூபாய் அதிகரித்து, ரூ.72,400ஆக இருந்தது. தங்கம் வெள்ளியின் விலையேற்றம் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.