கடந்த 2000ஆம் ஆண்டு, காப்பீட்டு துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக, அதன் பங்கு 26ஆக இருந்தது. இதற்கு பின்னர், 49 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. 26 விழுக்காடு பங்குகளை வைத்துக்கொள்ள நான்கு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
வரம்பு உயர்த்தப்பட்டதிலிருந்து முதல்முறையாக, அந்நிய நேரடி முதலீடு குறைந்துள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், காப்பீட்டில் துறையில் 4,721.68 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
கடந்தாண்டு, 4,212.61 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருந்தது. இதன்மூலம், நடப்பு நிதியாண்டில், முதலீடுகள் 509.07 கோடி ரூபாய் குறைந்துள்ளது. ஆயுள் காப்பீட்டுல் ஈடுபடாத துறையின் முதலீடானது 516.61 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், ஆறு மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் என மொத்தம் 33 பொது காப்பீட்டு நிறுவனங்கள் இயக்கிவருகின்றன.