கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளதால் கடந்த சில நாள்களாகவே பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்துவந்தது.
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை 4 விழுக்காட்டிலிருந்து 3.75 விழுக்காடாகக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன் காரணமாக இன்று காலை முதலே இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்தைச் சந்தித்தது. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 986.11 (3.22%) புள்ளிகள் அதிகரித்து 31,588.72 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது. அதேபோல தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 273.95 (3.05) புள்ளிகள் அதிகரித்து 9,266.75 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இன்று வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி, மாருதி சுசூகி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்தன. அதேபோல நெஸ்லே, டெக் மகேந்திரா, ஹெச்.சி.எல். ஆகியவற்றின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
இதையும் படிங்க: 'மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறலாம்; விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி' - ஆர்பிஐ ஆளுநர்