ETV Bharat / business

ஏறுமுகத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்த இந்திய பங்குச்சந்தை

மும்பை: இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியதையடுத்து இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றம் கண்டு தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Indian Stock market
Indian Stock market
author img

By

Published : May 13, 2020, 7:10 PM IST

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 637.49 புள்ளிகள் (2.03 விழுக்காடு) உயர்ந்து 32,008.61 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187 புள்ளிகள் (2.03 விழுக்காடு) உயர்ந்து 9,383.55 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம் இறக்கம் கண்ட பங்குகள்

ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் ஏழு விழுக்காட்டிற்கும் மேல் ஏற்றம் கண்டது. அதேபோல் அல்ட்ராடெக் சிமென்ட், எல் & டி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, எம் & எம், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றத்தைச் சந்தித்தன.

மறுபுறம், நெஸ்லே இந்தியா, பாரதி ஏர்டெல், சன் பார்மா, ஹெச்.யூ.எல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

காரணம் என்ன?

பிரதமரின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பங்குச்சந்தை

ஷாங்காய், சியோல் பங்குச்சந்தை ஏற்றம் கண்டன. ஹாங்காங், டோக்கியோ பங்குச்சந்தை இறங்கு முகத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஐரோப்பிய பங்குச்சந்தையும் சரிவை சந்தித்து தற்போது வர்த்தகமாகிவருகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஐந்து பைசா உயர்ந்து 75.46 ரூபாய்க்கு வர்த்தகமானது.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 1.30 விழுக்காடு குறைந்து பேரல் ஒன்று 29.59 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகிவருகிறது.

இதையும் படிங்க: கடன் தொகையை நிறுத்தி வைக்கக்கோரி 90% வாடிக்கையாளர்கள் விண்ணப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.