டெல்லி: பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் மொத்த பணவீக்க விகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தை விட அதிகரித்து 12.94 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் தற்காலிக எண்கள் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி (அல்லது அடுத்த வேலை நாளில்) இரண்டு வார கால தாமத்துடன் வெளியிடப்படுகிறது. 10 வாரங்களுக்குப் பின், இந்த விலைக் குறியீடு இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்.
அதன்படி, மே 2021 மாதத்துக்கான ஆண்டு மொத்த பணவீக்க விகிதம் 12.94 விழுக்காடாக உள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு ஆகியவை, பணவீக்கம் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அதானி நிறுவன பங்குகள் சரிவு - முதலீட்டாளர்கள் கணக்குகளை முடக்கிய என்எஸ்டிஎல்!
சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து கச்சா எண்ணெய் உயர்ந்து வருவதால் மேலும் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால், நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், வேலையிழப்புகளால் மக்களிடம் வாங்கும் திறன் குறையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.