ETV Bharat / business

"பொருளாதாரத்தைப் பற்றி தவறான கருத்துகளை வெளியிடுவோர் மீது கடும்நடவடிக்கை"- நிர்மலா சீதாராமன் அதிரடி! - nirmala seetharaman

டெல்லி: நாட்டின் பொருளாதார நிலை பற்றி தெளிவுபடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சில திட்டங்களை அறிவித்தார்.

Nirmala seetharaman on press conference
author img

By

Published : Aug 23, 2019, 11:27 PM IST

மத்திய நிதிநிலை அறிக்கையில் ஜிஎஸ்டி உயர்வால் பல நிறுவனங்கள் மூடப்படுகின்றன என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. அதேபோல் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளது என பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அதில் இந்தியப் பொருளாதாரம் 3.2 சதவீதம் மட்டும் தான் சரிந்துள்ளது என்று கூறிய அவர், ஜிஎஸ்டியில் சில திருத்தங்கள் செய்ய உள்ளதாகவும்; இது பற்றி வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தனது குழுவுடன் விவாதிக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வீட்டு வங்கிக்கடன் வட்டி விகிதத்தை குறைக்க உள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், வங்கிகளின் மறுமூலதனத்துக்கு 70 ஆயிரம் கோடி மத்திய அரசு தரவுள்ளதாக அறிவித்தார்.குறிப்பாக, நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி தவறான கருத்துகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.