நடப்பாண்டின் தொழில் துறை உற்பத்தி தொடர்பான அரசாங்க புள்ளிவிவர தகவல்கள் வியாழக்கிழமை (ஏப்ரல்9) வெளியாகின. அதில் தொழில் துறை உற்பத்தி குறியீடு 0.2 விழுக்காடு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) தரவுகளின்படி, உற்பத்தி துறை உற்பத்தி 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில் 0.3 சதவீதமாக இருந்தது.
2019 பிப்ரவரியில் மின்சார உற்பத்தி 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டின் இதே காலத்தில் வளர்ச்சியானது 1.3 விழுக்காடாக இருந்தது.
இதேபோல் முந்தைய 2.2 விழுக்காடு வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது சுரங்கத் துறை உற்பத்தி 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் தொழில்துறை (ஐ.ஐ.பி) வளர்ச்சி 2018-19 இதே காலகட்டத்தில் 4 விழுக்காடு விரிவாக்கத்திலிருந்து 0.9 சதவீதமாகக் குறைந்தது நினைவுக் கூரத்தக்கது.