ETV Bharat / business

எட்டு தொழிற்துறையின் உற்பத்தி 15 விழுக்காடு வரை சரிவு - கடும் சரிவில் உற்பத்தி துறை

டெல்லி: நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி ஜூன் மாதத்தில் 15 விழுக்காடு வரை சரிவடைந்துள்ளது.

Eight core industries' output contracts 15% in June

author img

By

Published : Jul 31, 2020, 8:02 PM IST

கரோனா பரவல் காரணமாக சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சரிவில் இருந்த இந்திய பொருளாதாரம், கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள உற்பத்தி வீழ்ச்சியால் எட்டு முக்கிய தொழிற்துறையின் உற்பத்தி ஜூன் மாதத்தில் 15 விழுக்காடு வரை குறைந்துள்ளது.

இந்த எட்டு முக்கிய துறைகள், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1.2 விழுக்காடு வரை அதிகரித்திருந்ததாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உரம் தயாரிக்கும் துறையை தவிர, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய ஏழு முக்கிய துறைகள் மே மாதத்தில் எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

எஃகு உற்பத்தி அதிகபட்சமாக 33.8 விழுக்காடு வரை சரிவடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து நிலக்கரியின் உற்பத்தி 15.5 விழுக்காடும், இயற்கை எரிவாயுவின் உற்பத்தி 12 விழுக்காடும் குறைந்துள்ளது. மின்சார உற்பத்தி 11 விழுக்காடும், கச்சா எண்ணெய் மற்றும் சிமென்ட் உற்பத்தி சுமார் 6 விழுக்காடும் குறைந்துள்ளது.

அதேபோல் மே மாதத்திலும், இந்த எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி 22 விழுக்காடு வரை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2019-2020ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்த துறைகள் 3.4 விழுக்காடு வளர்ச்சியடைந்திருந்தன. இந்நிலையில், இந்தாண்டிற்கான ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்த துறைகளின் உற்பத்தி 24.6 விழுக்காடு குறைந்துள்ளது.

இதையும் படிங்க: மூழ்கும் அமெரிக்க பொருளாதாரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.