ETV Bharat / business

இணைய பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் ஆர்பிஐ!

author img

By

Published : Dec 5, 2020, 9:40 AM IST

டெல்லி: தொடர்பு இல்லாத அட்டை, யுபிஐ மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கான வரம்புகளை அதிகரித்துள்ள ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை என்பிசிஐ-யின் நிர்வாக இயக்குநர் திலீப் வரவேற்றுள்ளார்.

இணைய பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் ஆர்பிஐ!
Dilip Asbe - MD & CEO, NPCI on RBI announcement

தொடர்பு இல்லாத அட்டை மூலம் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி சலுகை அளித்துள்ளது.

ஜனவரி முதல் ஒவ்வொரு பரிமாற்றத்திலும் தொடர்பு இல்லாத அட்டை (contactless card transactions) மூலம் ரூ.5000 வரை செலுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. PIN-யை உள்ளிடாமல் தொடர்பு இல்லாத அட்டை மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதற்கு முன் இந்தப் பரிவர்த்தனைக்கான வரைமுறை ரூ.2000 ஆக இருந்தது.

இது தொடர்பாக என்பிசிஐ-யின் தலைமை நிர்வாக இயக்குநர் திலீப் வெளியிட்டுள்ள செய்தியில், "இணைய பரிவர்த்தனையை ஊக்குவிக்கும்வகையில் மின்-ஆணை வரம்பை அதிகரித்துள்ள ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை வரவேற்கத்தது. இந்த நடவடிக்கை இணைய பரிவர்த்தனையை அதிகரிக்க உதவும். மேலும், பணம் இல்லாத பரிவர்த்தனை செய்யும் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான திசையில் அனைவரையும் படிப்படியாக இணைக்கும்.

இந்த அறிவிப்பு ரூபே அட்டைதாரர்களுக்கு ரூ.5000 அளவிற்கு இடையூறு இல்லாத பாதுகாப்பான பரிவர்த்தனை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.

இதேபோல், சமீபத்தில் தொடங்கப்பட்ட யுபிஐ ஆட்டோ-பே செயல்பாட்டின் பயனர்களுக்குப் பயன்பாட்டு பில்கள், முதலீடுகள், இருசக்கர வாகன இஎம்ஐக்கள் போன்ற உயர் கட்டணங்களைத் தடையின்றி பாதுகாப்பான முறையில் செலுத்த ஆர்பிஐ-யின் இந்த நடவடிக்கை ஒரு ஊக்கமாக அமைந்துள்ளது.

விழிப்புணர்வைப் பரப்புதல், தடையற்ற, பாதுகாப்பான மற்றும் வசதியான இணைய பரிவர்த்தனை அனுபவத்தை அனைவருக்கும் கொடுப்பதற்காக வலுவான தொழில்நுட்பம், பாதுகாப்பான உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் டிஜிட்டல் இந்தியா பயணத்தை இயக்குவதில் என்சிபிஐ தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதிய வடிவம் எடுத்த டி.பி.எஸ். வங்கிக்கு ரூ.2,500 கோடி மூலதனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.