கடந்த 6 ஆண்டு காலத்திற்குள் விவசாயம் மற்றும் கிராமப்புறம் சார்ந்த வேலைவாய்ப்பு 29.2 சதவீதம் அளவிற்குக் குறைந்துள்ளதால் 3.2 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புள்ளி விவரங்களை வெளியிடும் தேசிய அமைப்பான என்.எஸ்.எஸ்.ஓ அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த 3.2 கோடி பேரில் 3 கோடி பேர் விவசாயத்துறையில் நேரடியாகத் தொடர்புகொண்டவர்கள். இந்த புள்ளி விவரங்களின் 2011-12 ஆம் ஆண்டுக்குப்பின் கிராமப்புற வேலைகளில் ஆண்கள் 7.3 சதவீதம் பேரும், பெண்கள் 3.3 சதவீதம் பேரும் வேலையிழந்துள்ளனர்.
மேற்கொண்ட வேலையிழப்பின் காரணமாகக் கிராமப்புற குடும்பங்களின் வருமானமும் வெகுவாக சரிவைச் சந்தித்துள்ளது. 2011-12 ஆம் ஆண்டுகளில் 3.6 கோடி குடும்பங்கள் கிராமப்புற பொருளாதாரத்தைச் சார்ந்திருந்த நிலையில் தற்போது அது 2.1 கோடியாகக் குறைந்துள்ளது குறைந்துள்ளது. சுமார் 1.5 குடும்பங்கள் கிராமப்பொருளாதாரத்திலிருந்து நகர்ந்துள்ளது. அத்துடன் கிராம சுயவேலைவாய்ப்பிலிருந்து 1.9 கோடிப்பேர் வெளியேறியுள்ள நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டுக்குப்பின் ஒட்டுமொத்த வேலையிழப்பானது 4.3 கோடியைத் தொடுகிறது. புள்ளி விவரங்களை வெளியிடுவதில் தாமதம் காட்டுவதாகக்கூறிக் கடந்த டிசம்பர் மாதம் என்.எஸ்.எஸ்.ஓ அமைப்பின் அன்றைய தலைவர் பி.என். மோகன் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.