வோடபோன் ஐடியா வாடிக்களையாளர்கள் சந்தித்துவரும் தொழில்நுட்ப சிக்கலை தீர்த்திட நோக்கியா நிறுவனம் களமிறங்கியுள்ளது. இந்த புதிய ஒத்துழைப்பின் கீழ், VIஇன் வாடிக்கையாளர்களுக்கு நிலையான வயர்லெஸ் தொழில்நுட்பத்தை நோக்கியா வழங்கயுள்ளது.
இதுகுறித்து பேசிய VI இன் தலைமை வணிக அலுவலர் அபிஜித் கிஷோர், " இந்த டிஜிட்டல் பயணத்தில் நோக்கியாவுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொலைதொடர்பு உள்கட்டமைப்பை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் புதிய ஒத்துழைப்பு, இரு நிறுவனங்களின் உறவை மேலும் வலுப்படுத்தும்" எனத் தெரிவித்தார்.
தொலைதொடர்பு துறையில் பெரும் போட்டி நிலவிவரும் சூழ்நிலையில், தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்திக்கொள்வது வோடபோனின் சிறந்த முடிவாக பார்க்கப்படுகிறது.