கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் தற்போது ஸ்ட்ரீமிங் தளங்களை நோக்கித் திரும்பியுள்ளனர்.
அதன்படி, பிரபல ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸில், புதிய போக்கிமான் அனிமேஷன் சீரிஸை அமெரிக்காவில் மட்டும் பிரத்யேகமாக வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர்.
இந்தச் சீசனில் போக்கிமான் ஹீரோ அஷ் (ASH), பிக்காச்சு (Pikachu) ஆகியவற்றின் புதிய பயணங்கள் ரசிகர்களைக் கவரும்வகையில் உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து நிறுவனம் தரப்பில் கூறுகையில், "போக்கிமான் சீரிஸின் 23ஆவது சீசனில் முதற்கட்டமாக 12 எபிசோடுகள் மட்டும் ஜூன் 12ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்படும். மற்ற எபிசோட்ஸ் விரைவில் பதிவேற்றப்படும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நெட்ஃபிளிக்ஸ் - குழந்தைகள் பார்க்கும் வீடியோக்களை கட்டுப்படுத்த புதிய வழி