ETV Bharat / business

41% தனது சந்தை மதிப்பை இழந்தது ஜெட் ஏர்வேஸ்...! - 41 விழுக்காடு இழப்பு

நேற்றையப் பங்குச் சந்தை வர்த்தகத்தில், ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள், 41 விழுக்காடு சரிவுடன் தனது சந்தை மதிப்பை இழந்து, பெரும் சுமையுடன் தத்தளித்துவருகிறது.

jet airways falls
author img

By

Published : Jun 19, 2019, 10:04 AM IST

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்கும் முயற்சியில் வெற்றி கிடைக்காததால், அதற்கு கடன் வழங்கிய, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள், இப்பிரச்னையை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தன. இதனையடுத்து, நேற்றைய வர்த்தக தினத்தில், ஜெட் ஏர்வேஸ் பங்குகள் அதல பாதாளத்தில் வீழ்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில், இந்நிறுவன பங்குகள், 40.78 விழுக்காடு சரிவினை சந்தித்து, ஒரு பங்கு விலை, 40.45 ரூபாயாக நிலை கொண்டது. வர்த்தகத்துக்கு இடையே, 52.78 விழுக்காடு அளவுக்கு சரிவைக் கண்டு, இதுவரை இல்லாத வகையில், 32.25 ரூபாயை தொட்டது. இதனால் 73 விழுக்காடு விலைச் சரிவை கண்டதுடன், 1,253.5 கோடி ரூபாய் சந்தை மதிப்பிழப்பும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 12 நாட்களாக ஜெட் நிறுவன பங்குகள் சரிவினை சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.