பயனர்கள் செல்போன்களை பார்த்து பார்த்து வாங்குவதைக் காட்டிலும், ஹெட்போனை வாங்குவதிலே அதிக கவனம் செலுத்துவார்கள். சிலர் நாள் முழுவதும் ஹெட்போனை மாட்டிக்கொண்டே தான் தங்களது வேலைகளைச் செய்வார்கள். விலை குறைவான ஹெட்போன் அணிவதால் பிரச்னைகள் ஏற்படும் காரணத்தினால், அதீத தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட பிராண்டட் ஹெட்போன்களை தான் வாங்குவார்கள்.
ஆனால், ஹெட்போனில் வயர்கள் சுற்றிக்கொண்டு, சிரமம் ஏற்பட்டதால் வயர்லெஸ் இயர்பட்ஸ் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அந்த வகையில், ஹெச்டிசி நிறுவனம் U Ear என்ற வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இயர்பட்ஸின் டிசைன் பார்ப்பவர்கள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. ஏனெனில் இதைப் பார்ப்பதற்கு ஆப்பிள் ஏர்போட் போலவே தோற்றம் அளிக்கிறது. ஆனால், சார்ஜிங் போட் மட்டும் ஆப்பிள் மாதிரி இல்லாமல் முன்பக்கத்தில் உள்ளது.
ஏர்போட் அனைத்துமே வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆனால், ஹெச்டிசி இயர்பட்ஸ் கறுப்பு நிறத்தில் உள்ளது. இந்த இயர்பட்ஸின் விற்பனை விலை குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விலைகுறைந்த ஹெச்.டி டேப்லெட்டை வெளியிட்டது வால்மார்ட் நிறுவனம்!