மிலான் (இத்தாலி): ஃபெராரி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் காமிலெரி தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஃபெராரி தலைமை நிர்வாக அலுவலரான லூயிஸ் காமிலெரி, கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். முன்னாள் சிஇஓ செர்ஜியோ மார்ச்சியோனின் மரணத்தைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டில் காமிலெரி இந்த பதவியை ஏற்றுக்கொண்டார்.
ஃபெராரி நிறுவனத்தின் பிரபலமான எஃப் 1 விளையாட்டுக்கு பெரும் ஊக்கியாக திகழ்ந்தவர் இவர். ரேஸ் கார்களின் வணிகத்தை உயர்த்திக் காட்டி, நிறுவனத்தின் பெரும் நம்பகத்தன்மை மிக்கத் தலைவராக திகழ்ந்தவர் காமிலெரி.
கரோனா பாதிப்பினால் அவரது உடல்நிலையில் உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், அது அவரை தீவிரமாக பாதிப்படைய செய்ததாக தலைமை வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ஃபெராரியின் புதிய இடைக்கால தலைமை நிர்வாக அலுவலராக ஜான் எல்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.