டெல்லி: உள்நாட்டு போட் நிறுவனத்தில், அமெரிக்க நிறுவனமான வார்பர்க் பிங்கஸ் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் 731 கோடி ரூபாய் மதிப்பில் இந்த முதலீடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் நிறுவன தயாரிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிகம் கவனம் செலுத்த இருப்பதாக 'போட்' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக 2016ஆம் தோற்றுவிக்கப்பட்ட போட் நிறுவனம், ஹெட்ஃபோன்ஸ், இயர்ஃபோன்ஸ், ஸ்மார்ட்வாட்ச், ஸ்பீக்கர்ஸ், சார்ஜர்ஸ், பிரிமியம் கேபில்ஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்துவருகிறது. மொத்தம் 150 பணியாளர்களைக் கொண்டு நிறுவனம் தற்போது இயங்கி வருகிறது.
ரூ.5000-க்குள் அசத்தலான 5 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்!
மும்பை, டெல்லி ஆகிய இரு நகரங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. 2018ஆம் ஆண்டு முதன் முறையாக ஃபையர்சைடு வென்ஞ்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.6 கோடியை முதலீடாகப் பெற்றிருந்தது. கிடைத்த சிறு முதலீடுகளைக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் 100% விழுக்காடு வளர்ச்சியை எட்டிப்பிடித்தது, போட் நிறுவனம்.
புதிதாக கிடைக்கப்பெற்ற முதலீடுகளைக் கொண்டு நிறுவனத் தயாரிப்புகளை மேம்படுத்துதல், புதிய தகவல் சாதனங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளில் நிறுவனம் ஈடுபடப்போவதாக அதன் நிறுவனர்களில் ஒருவரான சமீர் மேத்தா தெரிவித்துள்ளார்.