டெக் உலகில் தலைசிறந்து விளங்குகிறது ஆப்பிள் நிறுவனம். ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி லேப்டாப்கள், கணினிகள் என்று அனைத்திலும் மிகச் சிறந்தவையாக அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் கருதப்படும்.
சர்வதேச டெக் உலகில் பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம், தனது தயாரிப்புகளில் இருக்கும் ஹார்டுவேர்-சாப்ட்வேர் என இரண்டையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும். இதன்மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தையும் வசதிகளையும் தர முடியும் என்று நம்புகிறது.
இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் தனது கணினிகளிலும் லேப்டாப்களிலும் இன்டெல் நிறுவனத்தின் பிராசஸர்களையே பல ஆண்டுகளாகப் பயன்படுத்திவந்தது. இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில், இனிவரும் ஆப்பிள் கணினிகளிலும் லேப்டாப்களிலும் தனது சொந்த பிராசஸர்களை பயன்படுத்த முடிவுசெய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் டிம் குக் தெரிவித்திருந்தார்.
இதன்பின் ஆப்பிள் தனது சொந்த சிலிகான் சிப் பிராசஸருடன் லேப்டாப்களை எப்போது வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் குறித்த செய்திகளை வெளியிடும் மிங்-சி குவோ, "ஆப்பிள் நிறுவனம் 2020ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் ஆப்பிள் சிலிக்கான் பிரசஸர்களை கொண்ட 13.3 இன்ச் மேக்புக் ப்ரோவை வெளியிடும் என்று நாங்கள் கருதுகிறோம்.
அதைத் தொடர்ந்தது ஆப்பிள் சிலிக்கான் பிராசஸரைக் கொண்ட புதிய மேக்புக் ஏர் லேப்டாப் மாடலை 2020ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிலோ அல்லது 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலோ வெளியிடும். அதேபோல 14 மற்றும் 16 இன்ச் கொண்ட புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் அடுத்தாண்டு இரண்டாம் அல்லது மூன்றாம் காலாண்டில் வெளியாகும்" என்றார்.
மிங்-சி குவோயின் தற்போது வெளியிட்டுள்ள இந்தப் புதிய அறிவிப்பு ஆப்பிள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: இனி கூகுள் கட்டுப்பாட்டில் வாட்ஸ்அப்!