கரோனா தடுப்பு முழு அடைப்புக்கு பின்னர், 40 நாள்கள் கழித்து மூன்று தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் முதல்நாள் வருமானம் ரூ.45 கோடியாக இருந்தது. இரண்டாம் நாள் விற்பனை ரூ.197 கோடியாக இருந்தது.
இந்நிலையில் 3-ஆவது நாளாக இன்று(மே.7) மது விற்பனை ரூ.230 கோடியாக உள்ளது. கர்நாடகாவின் மதுபான விற்பனை வரலாற்றில் சாதனையாகும். அந்த வகையில் ஏழு லட்சம் பீர் பாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளன. இதன் மூலம் அரசுக்கு ரூ.216 கோடியும், 39 லட்சம் லிட்டர் மற்ற இந்திய மதுபானங்கள் விற்பனை வாயிலாக ரூ.15.6 கோடியும் விற்பனை நடந்துள்ளது. கரோனா பாதிப்புகளுக்கு மத்தியில், மாநில அரசுகளுக்கு மது விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது சமூக ஆர்வலர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய- மாநில அரசுகளின் முடிவுகளுக்கு மருத்துவர்கள் சிலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.