ETV Bharat / business

ட்ரம்பின் இந்திய வருகை - இருநாட்டு வர்த்தக உறவை பலப்படுத்துமா? - இந்திய அமெரிக்க வர்த்தக உறவு

ஹைதராபாத்: இம்மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வருவதையடுத்து இரு நாட்டு வர்த்தக உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

author img

By

Published : Feb 12, 2020, 7:08 PM IST

Updated : Feb 22, 2020, 7:15 AM IST

குற்றச்சாட்டு நடவடிக்கைகளில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் முதல் முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யத் தயாராகிறார். சில காலமாக கடுமையான நெருக்கடியில் இருக்கும் அமெரிக்க - இந்தியா இருதரப்பு வர்த்தகம் உறுதியான தீர்வுகளுடன் மீண்டும் நேர் பாதையில் செல்லும் வாய்ப்புக்கான அறிகுறிகள் தெரிகின்றன.

உலகாளவிய அரசியலில் இந்தியாவின் தீவிரமான பங்கை வலுவாகப் பாதுகாக்கும் ட்ரம்ப் அரசாங்கம், வர்த்தக அம்சங்கள் என்று பார்க்கும்போது, உயர்த்திய வரிகளுடன் 'அமெரிக்காவிற்கே முதன்மை' என்கிற கொள்கையையே பின்பற்றுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவும் சமமான வலுவோடு பதிலளித்தது மற்றும் சங்கடமான வர்த்தக நிலைமை இரு நாடுகளுக்கும் ஏற்புடையதாக இல்லை.

இந்தப் பின்னணியில், ட்ரம்ப் நிர்வாகம் கோரிய வர்த்தக சலுகைகளை நாம் ஏற்றுக்கொண்டால், உள்நாட்டு வேளாண்மை மற்றும் பால் பண்ணைத் தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என்ற அச்சங்கள் உள்ளன. வாஷிங்டன் விரும்பியபடி, தீர்வை மற்றும் தீர்வையற்ற தடைகள் நீக்கப்பட்டு, சோளம், பருத்தி, சோயா, கோதுமை மற்றும் உலர் பழங்கள் (கொட்டைகள்) தயாரிப்புகளுக்கு உள்நாட்டு சந்தைகளின் கதவுகள் திறக்கப்பட்டால், அது நமக்குப்பெரும் ஆபத்தையே உண்டாக்கும் என்று விவசாய சங்கங்கள் அஞ்சுகின்றன.

ஒன்று , இரண்டு மாடுகள் அல்லது எருமைகளிடமிருந்து பால் விற்பனை வருமானமேயுள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான சிறு விவசாயிகளைக் கொண்ட இந்தியா, அதிக அளவில் மானியம் பெறும் அமெரிக்கப் பால் பொருட்களின் கடுமையான போட்டியைத் தாங்க முடியுமா என்பது கேள்வி. அமெரிக்க பருத்தி இறக்குமதி செய்யப்பட்டால், உள்நாட்டு பருத்தி விவசாயிகளுக்கு ஆபத்து ஏற்படும், மேலும் மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால், உயிர் பாதுகாப்பு ஆபத்தில் முடியும்.

கடந்த நவம்பரில் நரேந்திர மோடியின் அரசாங்கம் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையின் (ஆர்.சி.இ.பி.) மேடையில் இந்திய கண்ணோட்டத்தை வலியுறுத்திக் குரல் கொடுத்ததுடன், இந்திய விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்தது போல, அமெரிக்காவைக் கையாள்வதிலும் நாம் அச்சம் அல்லது பரிவில் இருந்து விடுபட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். 'வர்த்தகப் போர்கள் நல்லவை .... எளிதில் வெல்ல முடியும்' என்று கூறி, இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான வரிகளை அதிகரித்ததன் மூலம் அவர்களின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க ட்ரம்ப் விரும்பினார்.

இந்தியாவும் சீனாவும் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை அதிகரித்தபோது, அமெரிக்க விவசாயிகளிடமிருந்து சலசலப்பு ஏற்பட்டது. இப்போது ட்ரம்ப் தற்காலிக ஒப்பந்தங்களை மேற்கொண்டு நெருக்கடியில் இருந்து மீண்டுவர முயற்சிக்கிறார். ட்ரம்ப் அரசாங்கம் புகார் அளித்தாலும், 'பல ஆண்டுகளாக இந்தியா அமெரிக்கா மீது கடும் வர்த்தகத் தீர்வைகளை விதித்து வருகிறது; அது கட்டணங்களின் ராஜாவாகிவிட்டது, 'வர்த்தக அளவு சராசரி' அடிப்படையில் இந்தியா விதித்த கட்டணங்கள் அதிகம் இல்லை என்று நரேந்திரமோடி அரசு வாதிடுகிறது

வர்த்தகக் கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்றுமதிகள் மந்தமடைந்து வருவதாக பால் மற்றும் மருத்துவ பயன்பாட்டுத் துறையின் புகாரின் அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.பி (பொதுமைப்படுத்தப்பட்ட விருப்பத்தேர்வுகள் அமைப்பு) பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது. இந்தியா ஜி.எஸ்.பி மீட்புக்கு அழுத்தம் கொடுக்கும் இந்த நேரத்தில், அமெரிக்கா ஒரு பில்லியன் டாலர் (ரூ .71 ஆயிரம் கோடி) வர்த்தக ஒப்பந்தத்திற்கு பேரம் பேசி வருவதாகவும், ஏற்கெனவே மருத்துவ உபகரணங்களில் வெற்றி பெற்றதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

மாம்பழம், திராட்சை மற்றும் மாதுளைப் பழங்களின் எளிமையான இறக்குமதி ஒழுங்குமுறையை இந்தியா விரும்புகிற அதே நேரத்தில், 600 பில்லியன் டாலர் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாயில்களைத் திறக்க, அமெரிக்கா விரும்புகிறது. கோழியை ஆதாரமாகக் கொண்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் விருப்பம் நினைவாகி, கோழி மற்றும் முட்டை மிகவும் மலிவான விலையில் இறக்குமதி செய்யப்பட்டால், உள்நாட்டுச் சந்தை 40 விழுக்காடு வரை பாதிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சகம் ஏற்கெனவே 2015இல் எச்சரித்திருந்தது.

இந்த சமத்துவமற்றப் போட்டி இந்தியாவை மிகவும் கடுமையாகத் தாக்கும். அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக அளவின் இருதரப்பு பங்கு மூன்று விழுக்காடுகூட இல்லை. கடந்த நிதியாண்டில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 5 ஆயிரத்து 240 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 3 ஆயிரத்து 550 பில்லியன் டாலராகவும் இருந்தது. வர்த்தகப் பற்றாக்குறை ஆயிரத்து 690 பில்லியன் டாலராக வீழ்ச்சியடைந்தாலும், இந்திய சந்தையைப் அபகரிப்பதன் மூலம் பெரிய லாபம் ஈட்ட வேண்டும் என்ற ட்ரம்ப் அரசாங்கத்தின் விருப்பம், இந்திய விவசாயிகளின் அவல நிலையை உணரவில்லை. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓ.இ.சி.டி) படி, அரசாங்கங்களின் ஆதரவு விலைகளின் செயல் திட்டம் 2016இல் மட்டும் நமது அரசு ரூ .2 லட்சம் 65 ஆயிரம் கோடியை இழந்துள்ளது.

அதே ஆண்டில், சீனா தனது விவசாயிகளுக்கு 2,200 பில்லியனை டாலர் வழங்கியது மற்றும் 36 நாடுகளின் கூட்டணியான ஓ.இ.சி.டி 1,200 பில்லியன் டாலர் வழங்கலை ஆதரித்தது.

இந்திய விவசாயி ஆழ்ந்த சிக்கலில் இருக்கும் நேரத்தில், அமெரிக்க இறக்குமதியும் அனுமதிக்கப்பட்டால், அவரது நிலைப்பாடு கடாயிலிருந்து தப்பி நெருப்பிற்குள் விழுவது போல இருக்கும்.

அமெரிக்காவின் கோழிப்பண்ணை மீதான இறக்குமதி வரி, தற்போதைய 100 விழுக்காடிலிருந்து 30 விழுக்காடாக குறைக்கப்பட்டால் அல்லது பால் இறக்குமதியில் தேவையற்ற மென்மை காட்டப்பட்டால், அது வேளாண்மை சார்ந்த தொழில்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நமது உணவுக்காக கடுமையாக உழைத்து தேசத்தைத் தொடர்ந்து நடத்திச் செல்லும் விவசாயிகளின் நலன்களில் சமரசம் செய்யாதிருப்பது மோடி அரசின் கடமையாகும்.

Last Updated : Feb 22, 2020, 7:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.