கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் மத்திய எஃகு அமைச்சகம் சார்பில் தேசிய உலோகவியல் தினத்திற்காக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய எஃகு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய தர்மேந்திர பிரதான், "பொருளாதார ரீதியாக நிலையான புதிய தேசத்தை கட்டியெழுப்புவதில், பல தொழில்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதில் எஃகு தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது நாட்டின் தன்னிறைவை மேம்படுத்த மத்திய அமைச்சகம் ஒரு தேசிய கொள்கையை வகுத்துள்ளது. அதன்படி 2030ஆம் ஆண்டில் உற்பத்தித் துறையில் 300 மெட்ரிக் டன் எஃகு உற்பத்தி மேம்படும்" எனத் தெரிவித்தார்.
திருவனந்தபுரம், கல்பாக்கம், சென்னை, திருச்சி, கோவையில் உள்ள இந்திய நிறுவனங்களும் கலந்துகொண்டன.
இதையும் படிங்க...கேரளாவில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க பெல்!