மும்பை: தங்களது இணைய வர்த்தக தளப் பயனர்களுக்காக ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவித்துள்ளது.
இது அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் என்ற இணையதளத்தில் இச்சலுகை நேரடியாக வழங்கப்படும். தொலைக்காட்சிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மொபைல் போன்கள், லேப்டாப்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் சிறப்புச் சலுகைகள் கிடைக்கின்றன.
ஸ்மார்ட்போன் பிரிவில், தள்ளுபடிகள் மற்றும் கவர்ச்சிகரமான கேஷ் பேக் ஆஃபர்களை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
லேப்டாப்களை ரூ.16,999 முதல், 32 அங்குல ஸ்மார்ட் டிவிகள் ரூ.12,990 முதல் சலுகை விலையில் கிடைக்கின்றன.
மேலும், ரூ.1,999 மதிப்புள்ள இலவசப் பொருள்களுடன் டைரக்ட்-கூல் குளிர் சாதனப்பெட்டிகள் ரூ.11,990-க்கும், டாப்-லோடு சலவை இயந்திரங்கள் ரூ.13,290-க்கும் கிடைக்கின்றன.
வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள ஸ்டோர்களிலிருந்து இன்ஸ்டா டெலிவரி (3 மணி நேரத்திற்குள் டெலிவரி) மற்றும் ஸ்டோர் பிக்-அப் விருப்பங்களைத் தேர்வு செய்யலாம் எனவும் நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.