அமேசான் என்ற ஆன்லைன் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஜெஃப் பெசோஸ், இனி தனது நிறுவனத்திற்கு புதிய சிந்தனைகள் தேவை என்று கூறி தற்போது பதவி விலகியுள்ளார்.
இவருக்கு பதிலாக அன்டி ஜாஸ்ஸி என்பவர் புதிய சி.இ.ஓவாகப் பொறுப்பேற்கிறார். அதேவேளை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக ஜெஃப் பெசோஸ் நீடிக்கிறார்.
உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ள ஜெஃப் பெசோஸ், கால நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதற்கு அதிகளவில் நிதியை செலவிட்டுவருகிறார்.
விண்வெளி சார்ந்த துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்ற திட்டமும் பெசோஸிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட்டும் இவருக்கு சொந்தமாக உள்ளது.
இதையும் படிங்க: உங்கள் நகரத்தில் தங்கத்தின் விலை என்ன?