Q4 காலாண்டு முடிவில் இந்திய பொருளாதார வளர்ச்சி 4.3 விழுக்காடாக மாற வாய்ப்புள்ளதாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிதிசேவை நிறுவனம் நோமூரா(Nomura) தெரிவித்துள்ளது. தொடர்ந்து, வேலைவாய்ப்பு வளர்ச்சி மந்த நிலையால் நுகர்வு பாதிக்கப்பட்டதால் ,மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவைடைந்தது என்றும் இதன் விளைவாக இந்திய பொருளாதார வளர்ச்சி கடும் சரிவை சந்தித்துள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் 2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5 விழுகாடாக மாற வாய்ப்புள்ளது என்றும் 2020ஆம் ஆண்டில் இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 விழுக்காடாக மாறும் என்றும் நோமூரா கணித்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.1,200 செல்போன்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்க கோரிக்கை