ETV Bharat / business

ஒப்பந்தங்களின் அடிப்படையில் சர்வதேச விமான போக்குவரத்து!

author img

By

Published : Jul 17, 2020, 8:30 PM IST

Updated : Jul 18, 2020, 4:21 PM IST

டெல்லி: இருநாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் சர்வதேச விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது என்பது ஒரு சிறந்த வழியாகத் தோன்றினாலும், போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டவுடன் இந்த நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

air bubbles
air bubbles

கோவிட்-19 பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் மார்ச் இறுதி வாரத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்தன. அதேபோல இந்தியாவும் மார்ச் இறுதி வாரம் முதல் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்தது.

வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர சிறப்பு விமானங்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் ஃபிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க இரு நாட்டு ஒப்பந்தம் (bilateral ‘air bubbles’) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஏர் ஃபிரான்ஸ் விமான நிறுவனம் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு பாரிஸிலிருந்து 28 விமானங்களை இயக்கவுள்ளது. அதேபோல அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஜூலை 17 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை 18 விமானங்களை இந்தியாவுக்கு இயக்கவுள்ளது.

சர்வதேச விமானப் பயணம் தொடங்குவது குறித்து செயதியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "கோவிட்-19 பரவலுக்கு முன் எவ்வளவு விமானங்கள் இயக்கப்பட்டனவோ, அந்த எண்ணிக்கையை நாம் அடையும் வரை, இருதரப்பு ஒப்பந்தங்கள் (bilateral ‘air bubbles’) என்பது தொடரும்.

இந்த இரு தரப்பு ஒப்பந்தங்கள் என்பது குறிப்பிட்ட அளவு மக்களை அழைத்துவர உதவும்; ஆனால் பல வரையறுக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளுடன்! ஏனென்றால், சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இன்னும் பல கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து விதித்துவருகின்றன" என்றார்.

இருநாட்டு ஒப்பந்தங்கள் (bilateral ‘air bubbles’) என்றால் என்ன?

இருநாட்டு ஒப்பந்தம் என்பது சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்பதற்கான ஒப்பந்தமாகும். இருநாடுக்களுக்கு இடையே அத்தியாவசியமற்ற விமான பயணங்களை இது அனுமதிக்கிறது.

இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இயக்கலாம். ஆனால், அவ்வாறு இயக்கப்படும் விமானங்கள் வேறெந்த விமான நிலையத்திலும் தரையிறங்கக்கூடாது.

அதாவது டெல்லிக்கும் வாஷிங்கடன் நகருக்கும் இடையே ஒரு விமானம் இயக்கப்பட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், அது டெல்லியில் இருந்து நேரடியாக வாஷிங்கடனுக்கு இயக்கப்பட வேண்டும், இடையில் எரிபொருள் நிரப்ப உள்ளிட்ட எந்த காரணங்களுக்காகவும் நிறுத்தப்படக்கூடாது.

இதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு இந்தியா ஏன் முக்கியத்துவம் அளிக்கிறது?

அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு தடை விதித்துவிட்டு, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா மட்டும் விமான சேவையை தொடங்கியுள்ளது. விமான போக்குவரத்து ஒப்பந்தங்களை மீறுவதாக உள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது.

எனவே, இரு நாட்டு விமான நிறுவனங்களும் பயன்பெறும் வகையிலான ஒரு இருதரப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்திய முடிவு செய்துள்ளது. மேலும், பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பை சந்தித்துவரும் இந்திய விமானத் துறைக்கு இது ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த நாடுகள் இதுபோன்ற இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன?

கரோனா பரவலுக்கு பின் முதன்முதலில் சீனாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் மே முதல் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிலான விமான போக்குவரத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டது.

நியூசிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டன. ஆனால் ஆஸ்திரேலியாவில் தற்போது வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால், இந்த ஒப்பந்தம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

அதேபோல எஸ்தோனியா, லித்துவேனியா, லாட்வியா ஆகிய நாடுகளும் தங்களுக்குள் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியுள்ளன.

இதன் மூலம் ஏற்படும் ஆபத்துகள் என்ன?

இருநாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் சர்வதேச விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது என்பது ஒரு சிறந்த வழியாகத் தோன்றினாலும், போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டவுடன் இந்த நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திடும் இரு நாடுகளும் தங்கள் நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி கரோனா தற்போதுவரை கட்டுக்குள் வரவில்லை.

இந்தியாவில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்த இந்தியா தொடர்ந்து போராடிவருகிறது. அமெரிக்காவின் நிலைமை இதைவிட மோசமாகவுள்ளது.

அமெரிக்காவில் 35 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்விரு நாடுகளுக்குமிடையே சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குவது என்பது வைரஸ் தொற்றின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கக்கூடும்.

தாய்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தொற்றுநோயியல் வல்லுநர் தீரா வோரடனாரத், சர்வதே விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க கையெழுத்திடப்பட்டுள்ள இதுபோன்ற இருதரப்பு ஒப்பந்தங்களை மிகக் கடுமையாக சாடியுள்ளார்.

"உலகின் பல்வேறு நாடுகளும் கரோனாவைக் கட்டுப்படுத்த போராடிவருகிறது. இந்தச் சூழ்நிலையில் சர்வதேச போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து சிந்திக்கக்கூட கூடாது. இது தற்போதுள்ள சிக்கலை மேலும் அதிகரிக்கும்" என்று விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: 'இன்னும் 25 நாள்களில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டும்' - எச்சரிக்கும் ராகுல்

Last Updated : Jul 18, 2020, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.